ஒன்றிய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியர், வார்டன் வேலைவாய்ப்பு!

ஒன்றிய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் வார்டன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் விடுதி வார்டன் ஆகிய வேலைகளுக்கு 6329 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பணிக்கு மொத்தம் 5660 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, இந்தி, ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்று பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் சிறப்பு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை ஊதியம் வழங்கப்படும். உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களுக்குஎ ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் அளிக்கப்படும். 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்.எடி பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விடுதி வார்டன் வேலைக்கு மொத்தம் 669 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கு 334 இடங்களும், ஆண்களுக்கு 335 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்.

இந்தப் பணிக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை ஊதியம் வழங்கப்படும். 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்.எடி பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டி மொத்தம் 8 ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பணிகளுக்கான தேர்வு சென்னையில் நடைபெறும்.

www.emrs.tribal.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 18.