ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய விதிமுறை கொண்டுவந்த தமிழ்நாடு அரசு!

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திற்கு புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.

கருவூல கணக்குத் துறையின் வழியே ஓய்வூதியதாரர்களிடம் ஆண்டு முழுவதும் நேர்காணல் நடத்தி உயிர் வாழ்வை உறுதி செய்ய வழிவகை செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

ஓய்வூதியம் பெறும் நபர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்கான வாழ்வுச் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூல கணக்குத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்

இந்த புதிய நடைமுறை வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், ஓய்வூதியம் பெறுவோர் நேர்காணல் மூலம் வாழ்வுச் சான்றிதழ் வழங்கத் தவறினால், அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.