தொகுதி வாரியாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு தனக்கு கட் அவுட், பேனர் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு கட்டளை இட்டிருக்கிறார் நடிகர் விஜய்
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தன்னுடைய ரசிகர்களை வைத்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். அதன் தொடர்ச்சியாக, வருகிற சனிக்கிழமை தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் எடுத்த 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க இருக்கிறார் நடிகர் விஜய்.
இந்த விழா, சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடிகர் விஜய் 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகிறார். மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் காலை 7.45 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு விருந்தளிக்கிறார் நடிகர் விஜய்.
இந்த விழாவுக்காக விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேலை செய்து வருகின்றனர். இந்த விழாவிற்கு பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.