கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது.
மொத்தம் 36 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து, பாஜக 66 தொகுதிகளிலும், மஜத 22 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
பெரும்பாண்டை ஆட்சியமைக்க 114 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி பெறும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.