கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா! – அதிகாரப்பூர்வமாக அறிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு, யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றி பெற்றது. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையாவா? அல்லது காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரா? என்கிற குழப்பம் கடந்த சில நாட்களாக நிலவி வந்தது.

இந்நிலையில் வெற்றிபெற்ற பிறகு, யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா வருகிற சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை சித்தராமையாக கர்நாடக முதல்வராக நீடிப்பார். அதேபோல டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார். இந்த முடிவினை ஒருமனதாக எடுத்திருக்கிறோம்.” என தெரிவித்தார்.