கலைஞர் கோட்டம் திறப்பு விழா – பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருகை ரத்து…

இன்று திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு வருகை தர இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு உள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலைஞரின் வரலாற்றுப் புகழை நினைவுகூறும் இந்தக் கோட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் திறந்துவைப்பதாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தர இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதால், கடைசி நேரத்தில் திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமைச்சர் சஞ்சய் குமார் ஜா அகியோர் கலந்து கொள்கின்றனர்.