தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
+2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் தொடங்கியது. மே 19ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது.
இதுவரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப தேதியினை இன்று வரை நீட்டித்து இருந்தது கல்லூரிக் கல்வி இயக்ககம். ஆகையால் இன்று மாலை 5 மணி வரை மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். www.tngaasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.