காலாண்டு முடிவை வெளியிட்ட இந்துஸ்தான் யுனிலீவர் – 9.66 % வளர்ச்சி!

நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருக்கிறது

இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 2022 – 2023ம் நிதியாண்டிற்கான மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்தக் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் லாபம் ரூ.2552 கோடியாக உள்ளது. இந்து முந்தைய இதே காலாண்டை விட 9.66% வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 15,053 கோடி என்றும், இது முந்தைய காலாண்டில் ரூ. 13,584 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பீடும் போது வருவாய் 10.81 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில், வருமானத்தில் ஏற்ற இறக்கம் உள்ளது. நிதி ஆலோசனை நிறுவனங்களின் கருத்துக் கணிப்பின்படி, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் முழுமையான நான்காவது காலாண்டு வருவாய் ரூ.15,277 கோடியாகவும், நிகர லாபம் ரூ.2,584 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் வருவாய் வளர்ச்சி 9 சதவிகிதமும், மற்றும் தொகுதி வளர்ச்சி 5 சதவிகிதமுமாக உள்ளது.

2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகை ரூ.22 வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இதற்கு முன்பு 2022ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.17 வழங்கியுள்ளது.