கடந்த 20 ஆண்டுகளில் பூமி 80 செ.மீ கிழக்கே சாந்திருப்பதாக ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் ஆராய்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1993 முதல் 2010ம் ஆண்டுகளுக்கு இடையில் பூமி 80 செ.மீ கிழக்கே சாந்து இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. நிலத்தடி நீர் அதிக உறிஞ்சப்படுவதினால் இப்படியான ஓர் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் ஆராய்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்ப்ட்டு உள்ளது, இது 6 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். 1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய நாடுகளில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும். இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமையான தரவுகள் இல்லை எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை நிறுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.