குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.