சூடானில் நாடோடியாக திரிந்தோம் : சூடானில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் உருக்கம்!

சூடாலின் ராணுவப்படைக்கும் துணை ராணுவப்படைக்கும் நடக்கும் சண்டையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதில் 9 தமிழர்கள் தமிழ்நாடு திரும்பின.

சூடானில் ஒரு வாரத்திற்கும் மேலாக ராணுவப்படைக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே யாரிடம் அதிகாரம் போக வேண்டும் என்ற சண்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சூடானில் வசிக்கு வெளிநாட்டினரை அங்கிருந்து மீட்பதற்காக அந்தந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என திட்டத்தை செயல்படுத்தி சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது.

அதில், சூடானில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 9 பேர் தமிழர்கள். அதில் 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். நாடு திரும்பிய அவர்கள், செய்தியாளர்களிடம் பேசியதுபோது, “கடந்த எட்டு நாட்களாக நாங்கள் வேலையை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டோடியாக திரிந்தோம்” என உருக்கமாக பேசினர்.

தமிழ்நாடு திரும்பிய மீட்கபட்ட நபர்களை அரசு அதிகாரிகள் வரவேற்று அவரவர்களின் ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.