சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஹாட்டின் எமோஜி அனுப்பினால் சிறை: புதிய சட்டம்!

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எமோஜி ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி வருகிறோம். அன்பை வெளிப்படுத்த ஹார்ட்டினும், கோபத்தை வெளிப்படுத்த கோபமான எமோஜி என இப்படி பல எமோஜிக்கள் உள்ளன.

நண்பர்களுடன் சாட் செய்யும்போது நம்முடைய உணர்வை ஒரே எமோஜியின் வழியாக கடத்துவதற்கு இந்த வசதிகள் நமக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த ஹார்ட் எமோஜியை அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசு இயற்றியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2000 தினார் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5,37,800 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதே போன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரியால் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.22 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் 3 லட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.