சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை – இன்றைய நிலவரம்…

இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் சரிவடைந்து 63,129 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 18,738 ஆக இருந்தது.

காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 10.25 புள்ளிகள் உயர்வடைந்து 63,238.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20.50 புள்ளிகள் சரிந்து 18,776.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, நெஸ்டலே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.