சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்றைய பங்குச்சந்தை 99 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் சரிவடைந்து 63,423 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி19 புள்ளிகள் சரிந்து 18,837 ஆக இருந்தது.

காலை 10:06 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 50.16 புள்ளிகள் சரிவடைந்து 63,472.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிந்து 18,847.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், டாடா ஸ்டீல், இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமென்ட், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.