சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிவடைந்து 66,179 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து 19,649 ஆக இருந்தது.

காலை 10:38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 512.60 புள்ளிகள் சரிவடைந்து 65,946.71 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 132.40 புள்ளிகள் சரிந்து 19,601.15 ஆக இருந்தது.

நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.