சரிவுடன் தொடங்கி உயர்ந்த பங்குச்சந்தை!

இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை பின்னர் ஏற்றத்துடன் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் இன்று 57 புள்ளிகள் சரிவடைந்து 62,788 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்து 18,590 ஆக இருந்தது.

காலை 10:19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 177.96 புள்ளிகள் உயர்வடைந்து 63,024.34ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.50 புள்ளிகள் உயர்ந்து 18,634.15 ஆக இருந்தது.

நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதேபோல நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், டெக் மகேந்திரா பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.