சரிவுடன் தொடங்கி, பின்னர் உயர்ந்த பங்குச்சந்தை – இன்றைய நிலவரம்!

இன்றைய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி பின்னர் உயர்ந்தது.

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிவடைந்து 61,606 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் சரிவடைந்து 18,180 ஆக இருந்தது.

ஆனாலும் வர்த்தக நேரத்தின்போது காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.86 புள்ளிகள் உயர்வடைந்து 61,979.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53.80 புள்ளிகள் உயர்ந்து 18,257.20 ஆக இருந்தது.

டிவிஸ் லேப், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், இன்ஃபோசிஸ், விப்ரோ, எல்&டி, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்தன.

ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கோல் இந்தியா, பாரதி ஏர்டெல், ஐஷர் மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து 82.79 ரூபாயாக ஆக இருக்கிறது.