சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

பங்குச்சந்தை நிலவரம் சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 300.37 புள்ளிகள் என 0.84 சதவீதம் சரிந்து 35,474.51 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 107.20 புள்ளிகள் என 1% சரிந்து 10,656.20 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

ஐடி, மெட்டல், ஃபார்மா என அனைத்து முக்கியத் துறைகளின் குறியீடுகளும் நஷ்டத்துடன் முடித்துக்கொண்டன.
ஐடி நிறுவனப் பங்குகள் சரிவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததே காரணம். ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் Wipro, Tech Mahindra, HCL Technology, NIIT Technology, Mind Tree, Infosys மற்றும் TCS பங்குகள் ஒன்று முதல் 3.5 சதவீதம் சரிவுடன் காணப்பட்டன.