சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் வழங்கிய வழக்கறிஞர்! – நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததால் மன்னிப்பு கோரினார்

செயற்கை நுண்ணறிவு மென்பொருளான சாட்ஜிபிடி மூலமாக கிடைத்த தகவலை நீதிமன்றத்தில் வழங்கிய வழக்கறிஞரை கண்டித்த நீதிபதிகள். மன்னிப்பு கோரிய வழக்கறிஞர்.

செயற்கை நுண்ணறிவு மென்பொருளான சாட்ஜிபிடி மூலமாக கிடைத்த தகவலை நீதிமன்றத்தில் வழங்கிய வழக்கறிஞரை கண்டித்த நீதிபதிகள். மன்னிப்பு கோரிய வழக்கறிஞர்.

ராபர்டோ மாடா என்ற அமெரிக்காவைச் சேர்ந்த நபர், நியூயார்க் செல்வதற்காக, ஏவியான்கா நிறுவன விமானத்தில் பயணம் செய்தார். அப்போது உணவு பொருட்களை எடுத்துச் சென்ற டிராலி அவரது கால் மூட்டு பகுதியில் மோதியிருக்கிறது. இதனால், காயம் அடைந்த ராபர்டோ, ஏவியான்கா விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

ராபர்ட்டோவின் வழக்கறிஞர் ஸ்டீவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது ஏவியன்கா விமான நிறுவனம். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராபர்டோவின் வழக்கறிஞர் ஸ்டீவன், இதே போன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை தொகுத்து 10 பக்க ஆவணமாக தாக்கல் செய்தார். அதில் டெல்டா ஏர்லைன்ஸ், கொரியன் ஏர்லைன்ஸ் உட்பட பல விமான நிறுவனங்களின் பெயர்களில் தீர்ப்பு விவரங்கள் இருந்தன. இவை எல்லாம் தவறான தகவல்கள். இப்படியான ஒரு வழக்கு விவரங்களே கிடையாது என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

மேலும், வழக்கறிஞர் ஸ்டீவனிடம், “இந்த தகவல்கள் எல்லாம் எங்கிருந்து பெறப்பட்டது?” என விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம். அதற்கு வழக்கறிஞர் ஸ்டீவன், “செயற்கை நுண்ணறிவு மென்பொருளான சாட்ஜிபிடியை பயன்படுத்தி தகவல்கள் திரட்டியதாக பதில் மனுவில் தெவித்தார். மேலும், தவறான தகவல்களை வழங்கியதால் அவர் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.