சாப்பிட்ட பிறகு இந்த 5 விஷயங்கள் வேண்டவே வேண்டாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

சிலர் உணவு உண்ட பின் இனிப்புகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். சிலரோ நன்றாக தூங்க விரும்புகிறார்கள். உணவு உண்டபின் புகைபிடிப்பவர்களும் உண்டு.

உணவு உண்ட பிறகு குறிப்பிட்ட சில செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். உணவு உண்ட பிறகு என்ன செய்யக்கூடாது என்று நம்மில் பலருக்கு தெரியாது. மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் காணலாம்.

உடனடியாக உறங்குதல்:
பெரும்பாலானோர் உணவு உண்ட உடனேயே தூங்கிவிடுவார்கள். அனால், அப்படி செய்வதை தவிர்க்க வேண்டும். உணவு உண்ட உடனேயே தூங்குவது செரிமான செயல்பாட்டில் தடையை ஏற்படுத்தும். இதனால் உணவு மூலக்கூறுகளை உடைக்க நீண்ட நேரம் ஆகலாம்.

புகை பிடிக்காதீர்கள்:
சாப்பிட்ட உடனேயே புகை பிடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், உணவு உண்ட பிறகு புகைபிடிப்பது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. மேலும் அது உங்கள் வளர்சிதை மாற்றத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உணவுக்குப் பிறகு 1 சிகரெட் பிடிப்பது 10 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.

குளிப்பதைத் தவிர்க்கவும்:
உணவு உட்கொண்ட பிறகு குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது செரிமான செயல்முறையை குறைக்கிறது. ஏனெனில் குளிப்பது வயிற்றைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. குளிக்கும்போது, ​​இரத்தம் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பாய்ந்து செரிமானத்திற்கு இடையூறாக இருக்கும்.

டீ குடிக்க வேண்டாம்: தேநீர் அமிலத்தன்மை கொண்டது. ஏனெனில் இதில் காஃபின் உள்ளது. சாப்பிட்ட பிறகு டீ குடித்தால், உணவு செரிப்பது கடினமாக இருக்கும். உணவு மூலக்கூறுகள் சிதைவதற்கு நீண்ட நேரம் ஆகலாம். உணவுக்குப் பிறகு தேநீர் அருந்துவது இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும். ஆகையால் உணவு உண்ட பிறகு தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்:
பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உணவு உண்ட உடனேயே அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்தும். உணவுக்கு 2 மணி நேரத்திற்கு முன் அல்லது பின் பழங்களை சாப்பிட சிறந்த நேரமாக கருதப்படுகிறது.