சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு – முதல் 4 இடங்களைப் பிடித்த பெண்கள்!

2022ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது.

ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வினை நடத்தி வருகிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வினை நடத்தியிருக்கிறது யூ.பி.எஸ்.சி.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. முதன்மை தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேர்முகத்தேர்வு நடைபெற்று வந்தது.

அதற்கான முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.