சிவில் நீதிபதி பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சிவில் நீதிபதி பணிக்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்.

தமிழ்நாடு நீதித்துறையில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி வேலைக்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்.

இந்தப் பணிக்கு 45% மதிப்பெண்களுடன் இளநிலை சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.27,700 முதல் ரூ.44,770 ஊதியம் அளிக்கப்படும். 25 வயது முதல் 37 வயதுக்குள் இருக்கிற பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 30.