சீனாவில் புதியவகை கொரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்? – சுகாதார ஆலோசகரின் அறிக்கையால் பரபரப்பு

சீனாவில் புதியவகை கொரோனாவால் வரும் ஜூன் மாதத்தில் 6 கோடி பேர் பாதிக்கப்படலாம் என சீன ஊடகங்களின் மூலம் பரவும் தகவலால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பினால் உலகமே முடங்கிப்போனது. லட்சக் கணக்கான உயிர்கள் பலியாகின. சீனாவில் உருவானா கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்தது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் ஒரு புதியவகை வீரியமிக்க கொரோனா வைரஸ் சீனாவை தாக்க உள்ளதாக முதன்மை சுகாதார ஆலோசகரின் அறிக்கையை சுட்டிக்காட்டி சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும், என்றும், இந்த வகை தொற்றால், நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.