சென்செகஸ் 400 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

சென்செகஸ் 400 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்று மும்பை பங்குச்சந்தை 400 புள்ளிகளுக்கும் அதிகமாக ஏற்றத்துடன் தொடங்கியது!

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று சென்செக்ஸ் 469 புள்ளிகள் உயர்வடைந்து 62,970 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 123 புள்ளிகள் உயர்ந்து 18,622 ஆக இருந்தது.

காலை 09:41 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 440.78 புள்ளிகள் உயர்வடைந்து 62,942.47 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 110.70 புள்ளிகள் உயர்ந்து 18,610.05 ஆக இருந்தது.

நிறுவனங்களின் பங்குகளை பொறுத்தவரை, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், இன்போசிஸ், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, இன்ட்ஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.