இன்றைய பங்குச் சந்தை வார முதல் நாளே கனிசமான புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியிருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 358 புள்ளிகள் உயர்வடைந்து 62,905 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி100 புள்ளிகள் உயர்ந்து 18,634 ஆக இருந்தது.
காலை 9:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 318.80 புள்ளிகள் உயர்வடைந்து 62,865.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.20 புள்ளிகள் உயர்ந்து 18,605.30 ஆக இருந்தது.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு அதிகரித்து செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக சர்வதே பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
நிறுவனங்களின் பங்குகளைப் பொருத்தவரை,பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
டெக் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.