சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கார் ஓட்டுநர் வேலை – 19,000 முதல் 60,000 வரை சம்பளம்

சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் கார் ஓட்டுநர் வேலைக்கு 7 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் Staff Car Driver (Ordinary Grade) வேலைக்கு 7 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுளன.

மொத்தம் உள்ள 7 காலிப்பணியிடங்களில் பொது பிரிவினருக்கு 4 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு இடமும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ஒரு இடமும், ஆதி திராவிட பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கார் ஓட்டுநராக 3 வருடம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அவ்வப்போது காரில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் அளிக்கப்படும். 18 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வருடங்களும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.chennaicustoms.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்கவ் வேண்டிய முகவரி
THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT) GENERAL COMMISSIONERATE OFFICE OF THE PRINCIPAL COMMISSIONER OF CUSTOMS, CUSTOM HOUSE, NO. 60, RAJAJI SALAI,CHENNAI-600 001

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 30.