சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் இரயில் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

சென்னை – திருப்பதி இடையே ஜோலர்பேட்டை வழியாக வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

அதிவேக இரயில் சேவையை வழங்குவதற்காக இந்திய இரயில்வே வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைத்தது. வட இந்தியாவின் பல பகுதிகளி இந்த வந்தே பாரத் அதிவேக இரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.

அதேபோல தென் இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைத்தார்.

இதேபோல, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் -திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரெயில் வரும் 7-ந்தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரெயில் பாதைகள் தயாராக உள்ள நிலையில் இந்த சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.