சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – மே 22ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவியல் ஆலோசனை சட்ட உதவி உள்ளிட்ட சேவைகளை வழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் ஒருங்கிணைந்த சேவை மையம் ஒன்றை தொடங்க உள்ளது. அதற்கு வழக்கு அலுவலர்கள் (Case Worker), பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் ஆகிய வேலைகளுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கு அலுவலர்கள் (Case Worker) வேலைக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, சோஷியல் வொர்க் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுகு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது உளவியல் ஆலோசனை தொடர்பான பணியில் ஒரு நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

35 வயதிற்குள் இருபப்வக்ரள் விண்ணப்பிக்கலாம். சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.

பாதுகாப்பாளர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்த பணிக்கு அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக வேலை செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சென்னையை சேர்ந்தவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.

பன்முக உதவியாளர் அதாவது Multi Purpose Helper வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் போதும். மேலும் சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு ஊதியமாக ரூ.6,400 வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கான உரிய கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பங்களை கொண்டுவந்து கொடுக்கலாம்.

விண்ணப்பங்கள் கொண்டுவந்து கொடுக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
8வது தளம், சிங்காரவேலன் மாளிகை,
இராஜாஜி சாலை, சென்னை – 1

விண்ணப்பங்களை மே 22ம் தேதி மாலை 5 மணிக்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும்.