சென்னையில் உருவாகும் மாபெரும் Fintech City : கூகுள் நிறுவனம் வருமா..?

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள GIFT CITY-யில் கூகுள் புதிகாக ஒரு குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்தார்.

கூகுள் நிறுவனம் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து முக்கிய வர்த்தக பிரிவில் இருந்து ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்து வரும் வேளையில், பின்டெக் சேவைக்காக இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள GIFT CITY-யில் கூகுள் புதிகாக ஒரு குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள GIFT CITY என்பது பின்டெக் சேவை துறைக்காவே கட்டப்பட்டது. இந்தியாவில் இருக்கும் மற்ற டெக் பார்குகளுக்கும் இந்த GIFT CITY-க்கும் இருக்கும் பெரிய வித்தியாசமே மொத்த டெக் பார்க்-ம் நிதியியல் சேவை துறைக்காக பார்த்து பார்த்து உள்கட்டமைப்பு முதல் டெக் கட்டமைப்பு வரையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த GIFT CITY-யில் சுமார் 261 ஏக்கர் நிலம் வெளிநாட்டு பைனான்சியல் டெக் சேவை மற்றும் நிதி & நிதியியல் சேவை அளிக்கும் நிதியியல் நிறுவனங்கள், வங்கிகள், இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு state-of-the-art infrastructure உடன் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் தான் கூகுள் தனது புதிய குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளது.

குஜராத்தில் இருக்கும் GIFT City-ஐ போலவே சென்னையில் நந்தம்பாக்கம் பகுதியில் Fintech City சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் பணிகளை நடந்து வருகிறது. சுமார் 2,349 கோடி ரூபாய் முதலீட்டில் 15 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இப்பகுதியில் திட்டமிட்டப்பட்டு உள்ள 15 கட்டிடங்களில் ஒவ்வொரு கட்டிடமும் 12 மாடி அளவில் கட்டப்பட உள்ளது மட்டும் அல்லாமல் 15ல் 14 கட்டிடங்கள் அலுவலக பகுதியாகவும், 1 கட்டிடம் குடியிருப்பு வளாகமாகவும் இருக்கப்போகிறது.இந்த மாபெரும் Fintech City திட்டத்தின் வாயிலாக சுமார் 67000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே சென்னை Fintech City-க்கானபணிகள் துவங்கப்பட்ட நிலையில், கட்டுமான பணியில் முக்கியமான இடத்தை எட்டியுள்ள காரணத்தால் TIDCO சுற்றுசூழல் ஒப்புதலை பெறுவதற்காக மார்ச் மாதம் விண்ணப்பத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பல துறையில் பெரிய வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஃபின்டெக் துறை மூலம் புதிய வளர்ச்சி பாதையை அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே பின்டெக் துறையில் சிறிதும் பெரிதுமாக பல நிறுவனங்களை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் உலகளாவிய இடமாக மாற்றும் நோக்கில் ‘FinTech Policy 2021’ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதன் வாயிலாக 2025ஆம் ஆண்டுக்குள் சென்னையைத் இந்தியாவின் பின்டெக் துறைக்கான தலைநகராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் குஜராத் கிப்ட் சிட்டியில் கூகுள் தனது குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டர்-ஐ அமைத்துள்ள நிலையில், சென்னைக்கு கூகுள் விரிவாக்கம் செய்யுமா..?