சைபர் க்ரைம் அச்சுறுத்தலினால் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை முடக்கிய சீனா!

வதந்திகள் மற்றும், சைபர் க்ரைம் அச்சுறுத்தலினால் சீனாவில் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன.

சமூக வலைதளத்தின் மூலம் பண மோசடியில் ஈடுபடுதல், வதந்திகளை பரப்புதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதில் சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை முடக்கி உள்ளதாக அந்நாட்டின் இணையதள விவகார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் டிக்டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.