சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 ரக விமானம்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர்பஸ் சி-295 ரக விமானத்தை வாங்குவதற்காக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அந்த விமானம் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

இந்திய விமானப் படையில் தற்போது உள்ள ஏவ்ரோ ரக விமானங்களுக்கு பதிலாக சி-295 ஏர்பஸ் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்காக ஏர்பஸ் சி-295 ரகத்தில் 56 விமானங்களை வாங்க ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் டிஃபன்ஸ் & ஸ்பேஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான முதல் விமானத்தை அந்நிறுவனம் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விண்ணில் பறந்து தன்னுடைய சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்திருக்கிறது சி -295 ரக விமானம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஜீன்-பிரைஸ் டுமான்ட் தெரிவித்தபோது,“இந்தியாவுக்காகத் தயாராகும் ஏர்பஸ் சி-295 விமானத்தின் முதல் விமானத்தின் பயணம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. உலகிலேயே சி-295 விமானத்தின் மிகப்பெரிய ஆபரேட்டராக இந்திய விமானப்படை உருவாகும் நிலையில், இந்த திட்டம் இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும்” என கூறினார்.