“ஜிகு ஜிகு இரயில் கெளம்புது பார்” மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு பாடல் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் வேளையில், இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயந்தி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது. வடிவேலுவின் குரலில் ‘ராசாக்கண்ணு’ பாடல் ஹிட் ஆகியது. இதுவரை அந்தப் பாடலை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டிருக்கிறது படக்குழு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் “ஜிகு ஜிகு இரயில் கெளம்புது பார்”என்ற பாடல் வெளியாகி 4 மணி நேரத்தில் மூன்றரை லட்சம் பேர் பார்த்துள்ளனர்.