ஜியாலஜிஸ்ட் வேலைக்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்.
தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் சுரங்கத்துறையில் ஜியாலஜிஸ்ட் வேலைக்கு 40 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
நீர்வளத்துறையில் Assistant Geologist வேலைக்கு 11 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, எம்.எஸ்.சி ஜியாலஜி, எம்.எஸ்.சி அப்ளைடு ஜியாலஜி அல்லது ஹைட்ரோஜியாலஜியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சுரங்கத்துறையில் Assistant Geologist வேலைக்கு 29 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, எம்.எஸ்.சி ஜியாலஜி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை ஊதியம் அளிக்கப்படும். 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கும் பொது பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது.
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 23.