இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் – காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டி வைத்து கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரது 32வது நினைவு தினத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்த நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இன்று ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோ அஞ்சலி செலுத்தினர்.