ஜூலை 11ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜூலை 11ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனிம் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில நிதியமைச்சா்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கவுன்சில் கூட்டம் இது. இதில், சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, பன்நோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறு ஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.