டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியாவுக்கு முதலிடம்!

காகிதம் இல்லா பண பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நீக்கத்திற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தைனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மத்திய அரசு காகிதம் இல்லாத டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்து அந்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் : உலக அளவில் 2022-ம் ஆண்டில் டிஜிட்டல் வழி பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா, 8.95 கோடி பேர் (46 சதவீதம்) என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து உள்ளது.” என தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் 2.92 கோடி பேருடன் பிரேசில் 2-வது இடமும், 1.76 கோடி பேருடன் சீனா 3-வது இடமும் பிடித்து உள்ளன. தொடர்ந்து, 1.65 கோடி பேருடன் தாய்லாந்து 4-வது இடமும், 80 லட்சம் பேருடன் தென்கொரியா 5-வது இடமும் பிடித்து உள்ளன