டுவிட்டரில் வரும் புதிய வசதிகள் : எலான் மஸ்க் அறிவிப்பு!

டுவிட்டரில் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் செய்வதற்கான வசதிகளை கொண்டுவர இருக்கிறது டுவிட்டர் நிறுவனம்

கடந்த ஆண்டு எலான் மஸ்ட் டுவிட்டரை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக லாப நோக்கில் அவர் மேற்கொண்ட பல்வேறு விஷயங்கள் பயனாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலு, தற்போது அவர் அறிவித்திருக்கும் வசதி பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

டுவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் டுவிட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.