டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற பயணிகள் நீர்மூழ்கி கப்பல் மாயம்!

1912ல் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்ப்பதற்காக 5 பேருடன் சென்ற பயணிகள் நீர்மூழ்கி கப்பல் மாயமானது.

1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்ற டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. அதில் பயணம் செய்த 1500 பயணிகள் உயிரிழந்தனர்.

மறக்க முடியாத இந்த வரலாற்றுச் சம்பவத்தின் எச்சங்கள் 1985ஆம் அண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விரிவாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்த கப்பலை சுற்றிப்பார்ப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். சமீபத்தில் கூட அதன் முப்பரிமாண வடிவம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அட்லாண்டிக் கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்ப்பதற்காக 5 சுற்றுலா பயணிகளுடன் 21 அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று சென்றிருக்கிறது. புறப்பட்ட 2 மணி நேரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை திங்கட்கிழமைவரை தெரியவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணியில் கனடா – அமெரிக்கா கடற்படைகள் இறங்கி உள்ளன.

மீட்புப் பணிகள் குறித்து அமெரிக்க கடற்படை கூறும்போது, “அந்த தொலைதூரப் பகுதியில் தேடுதல் நடத்துவது சவாலானது. அவர்களை கண்டுபிடிக்க அனைத்து தொழில் நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர்களது கப்பலில் போதுமான அளவு ஆக்சிஜன் இருக்கும் என நினைக்கிறோம். விரைவில் அவர்களை மீட்போம்” என தெரிவித்தனர்.