ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார், குருவியின் லோகோவிற்கு பதிலாக எக்ஸ்(X) எனும் லோகோவை ஃஅதிரடியாக மாற்றியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார் . சமீபத்தில் நாய் (Doge) படத்தை லோகோவாக மாற்றியிருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல ட்விட்டர் சிஇஓ பொறுப்பையும் அதிரடியாக நீக்கீனார்.
எலான் மஸ்க்கின் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பலரது மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது. லோகோவை மாற்றுவது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ட்விட்டரின் லோகோ நீலக் குருவிக்கு பதிலாக எக்ஸ் (‘X’) என லோகோ மாற்றப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில், ”விரைவில் டிவிட்டரின் பிராண்டை மாற்ற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அனைத்து பறவைகளும் விடுவிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டிருந்தார். அதோடு, டிவிட்டரின் புதிய லோகாவான ”எக்ஸ்” தொடர்பான சிறிய வீடியோவயும் வெளியிட்டார்.
இந்த நிலையில் எலான் மஸ்கின் அறிவிப்பின் படி ட்விட்டர் லோகோ குருவிக்கு பதிலாக X என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து இணையத்தில் Twitter X என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.