தன்னை இளமையாக வைத்துக்கொள்ள வருடத்திற்கு ரூ.16 கோடி செலவு செய்யும் நபர்!

பிரையன் ஜான்சன் என்ற தொழிலதிபர் தன்னை 45 வயதில் இருந்து18 வயதுபோல காட்டிக்கொள்வதற்கு வருடத்திற்கு ரூ.16.52 கோடி செலவு செய்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரையன் ஜான்சன் என்ற தொழிலதிபர், 1999 முதல் 2003ம் ஆண்டு வரை மூன்று புதிய நிறுவனங்களை தொடங்கி இருக்கிரார். அதில் ப்ரையண்ட்ரீ என்ற E-Commerce நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். பின்னர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அவருடைய பிரையண்ட்ரீ நிறுவனத்தை Paypal நிறுவனத்திற்கு 800 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளார்.

பின்னர் அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய வயதை குறைத்துக் காட்டிக்கொள்ளவும் எப்பொழுதும் இளமையாக இருக்கவும் செலவு செய்ய தொடங்கியிருக்கிறார். பிரையன் ஜான்சன் தனது உடல்நிலையை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க 30 பெரிய மருத்துவர்களைக் கொண்ட குழுவை வைத்துள்ளார். இந்த மருத்துவர்கள் அவரின் இதயம், இரத்தம், கல்லீரல், சிறுநீரகம், மூளை, இரத்த நாளங்கள் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். பிரையன் ஒவ்வொரு நாளும் 80 வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுகிறார். ஒவ்வொரு மாதமும் அவர் 30 கிலோ ஆர்கானிக் காய்கறிகளை சாப்பிட்டு, தினமும் 8.30 மணிக்கு தூங்கச் செல்கிறார். வயிற்றில் எந்த குறைபாடும் ஏற்படாத வகையில், அல்ட்ராசவுண்ட் மற்றும் இதர பரிசோதனைகள் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட வயிற்றின் நெகடிவ் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரையன் மிக விரைவில் 18 வயதை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தினமும் 1977 கலோரிகளுக்கு மேல் சாப்பிடுவதில்லை. இதில் பாதாம் பால், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் பெர்ரி ஆகியவை அடங்கும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக தனது உடல்நிலைக்காக செலவழித்த பிறகு, அவர் தனது இதயத்திற்கு 37 வயது என்றும், அவரது தோலுக்கு 28 வயது என்றும், அவர் அடைந்த உடற்தகுதி 18 வயது என்றும் தெரிவித்துள்ளார்.

இரவு 8.30 மணிக்கு உறங்கச் சென்றுவிட்டு, அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, பின்னர் சப்ளீம்ண்ட்களை எடுத்துக்கொள்வது. தேயிலை எண்ணெயில் பற்களை சுத்தம் செய்துவிட்டு, குளித்த பிறகு 7 வகையான கிரீம்களைப் பயன்படுத்துகிறார். பிறகு சைவ உணவு மட்டுமே உள்ள உணவை உண்கிறார். சாப்பிட்டுவிட்டு மருத்துவக் குழுவிடம் சென்று அங்கு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். தினமும் தன்னுடைய உடல் சார்ந்து மட்டுமே முழு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து வருகிறார் பிரையன் ஜான்சன்.