தன் நடிப்புடன் ஒப்பிட்ட ஜெயம் ரவி..
பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி சிவாஜி நடிப்பை தன் நடிப்புடன் ஒப்பிட்டு பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
பெங்களூரில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனல் நிகழ்ச்சியில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, “நான் படங்களில் நல்லவனாக நடிக்க விரும்பவில்லை. அப்படி நடித்தால் ஒரே மாதிரியான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால், கெட்டவனாக நடித்தால் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி தந்தார்.
பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பு அந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் என்னுள் வந்திருக்கும், என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது. அவர் பெரிய லெஜண்ட் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. என்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்தேன்.
மணி சாரை நம்பினேன், கல்கியை நம்பினேன் ,கடவுளை நம்பினேன். என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என நினைக்கிறேன். உங்களுக்கு பிடித்தால் போதும் என பேசி உள்ளார் ஜெயம் ரவி.
பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனல் டூருக்காக ஊர் ஊராக புதிய படங்களில் ஏதும் கமிட் ஆகாமல் சுற்றி வரும் ஜெயம் ரவி கோட் சூட் அணிந்து செம கெத்தாக அடுத்து மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளம்பிய போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.