தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்!

வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் உயர்ந்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும்.” என மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.