தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் வேலைவாய்ப்பு : ரூபாய் ஒரு லட்சம் சம்பளம்!

தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் ஜூனியர் சயிண்டிஃபிக் ஆஃபிசர் வேலைக்கு தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் ஜூனியர் சயிண்டிஃபிக் ஆஃபிசர் வேலைக்கு 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கான தேர்வினை தற்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டு 31 இடங்களில், வேதியியல் பிரிவுக்கு 20 இடங்களும், உயிரியியல் பிரிவுக்கு 4 இடங்களும், இயற்பியல் பிரிவுக்கு 3 இடஙக்ளும், கம்ப்யூட்டர் ஃபாரன்சிக் சயின்ஸ் பிரிவுக்கு 4 இடங்களும் உள்ளன.

எம்.எஸ்.சி ஃபாரன்சிக் சயின்ஸ் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, உயிரியல், வேதியியல், இயற்பியல் துறைகளில் எம்.எஸ்.சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது. ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை ஊதியம் அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு ஜூலை 23ம் தேதி நடைபெறும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 26.