தமிழ்நாட்டில் பணியாற்றுவதை கெளரவமாக கருதுகிறேன் – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

தமிழ்நாட்டில் பணியாற்றுவதை கெளரவமானதாக கருதுகிறேன் என தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றார் நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா. அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய நீதிபதி கங்காபூர்வாலா, “சான்றோர்களையும், கலை கலாச்சார செறிவையும் கொண்ட தமிழ்நாட்டில் பணியாற்றுவதை பெருமையாகவும் கெளரவமாகவும் கருதுகிறேன். அவற்றை நானும் பின்பற்றி இங்கே வசிக்கப்போகிறேன்” என பேசினார்.