தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு!

தமிழ்நாட்டி பள்ளிகள் திறப்பு தேதி 7ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஜூன் 7ம் தேதிக்கு பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி தற்போது பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும், 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.