திமுக ஆட்சியில் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த உழவர் உற்பத்தியாளர் கண்காட்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் சிறப்புரையாற்றினார்.

சென்னை நந்தம்பாகத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி கருத்தரங்கத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதில் பேசிய அவர்,வேளாண் துறை வளர்ச்சி மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒருநாட்டின் செழிப்பின் அளவுகோல் வேளாண் துறை. திமுக ஆட்சியில் வேளாண்மை துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து தனி பட்ஜெட் போடப்படுகிறது. வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர். வேளாண்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி உள்ளோம். வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் உள்ளது. புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திமுக அரசு வேளாண் புரட்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு உழவர்களுக்கு விரோதமாகவே எப்போதும் செயல்பட்டு வருகிறது. 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து உழவர்களை போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசு.” என பேசினார்.