தியேட்டரில் விற்கப்படும் பாப்கார்ன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்..! அதிர்ச்சி தகவல்..

“பாப்கார்ன் விரும்பிகள்” என்று ஒரு தனி கூட்டமே தியேட்டரில் நம்மால் பார்க்க இயலும். படத்தை பார்ப்பது ஒரு காரணம் என்றால், பாப்கார்னிற்காக வருவது வேறொரு காரணம். சிறியவர்கள் முதல் பெரியர்வகள் வரை இந்த பாப்கார்னிற்கு அடிமை என்றே சொல்லலாம்.

பலரின் பிரியமான இந்த பாப்கார்ன் உங்களுக்கு புற்றுநோய் தருகிறது என்றால் அது எவ்வளவு மோசமான விஷயமாக இருக்கும். இதனை உணராமல் நாம் இத்தனை நாளாக இந்த பாப்கார்னை விரும்பி சாப்பிட்டு வந்திருக்கின்றோம். பாப்கார்ன் எப்படி நமக்கு புற்றுநோயை தருகிறது என்பதை இந்த பதிவில் முழுமையாக அறிவோம்.

சுடசுட பாப்கார்ன்..!
படம் பார்க்க தியேட்டருக்கு சென்றவுடன், பல வரிசைகள் இந்த பாப்கார்னிற்காக வெளியில் காத்திருக்கும். பெரிய பெரிய பக்கெட்டுகளில் இந்த பாப்கார்னை வாங்கி கொண்டே செல்வார்கள். சுட சுட பாப்கார்ன் என்றால் பலருக்கு அலாதி பிரியமாக இருக்கும். இதில் பலவித ஃபிளேவர்களும் உள்ளன.

ஆரோக்கியமானதா..?
இத்தனை நாளாக ஒரு தப்பு கணக்கை நம் மனதில் போட்டு வைத்திருந்தோம். அதாவது, பாப்கார்ன் சோளத்தை கொண்டு தயார் செய்வதால் நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று எண்ணினோம். ஆனால், நாம் நினைத்ததை போன்று இது கிடையாது என்பதே நிதர்சனம்.

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அண்மையில் நடந்த ஆராய்ச்சியில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த திடுக்கிடும் தகவலை கண்டறிந்தது. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை நாம் சாப்பிட கூடிய இந்த பாப்கார்களில் இருப்பதாக கூறியது. இவை நமது உடலில் புற்றுநோயை உருவாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த நிர்வாகவும் கூறியது.

எதனால் புற்றுநோய்..?
பாப்கார்னை தர கூடிய பாக்கெட்டுகள் அல்லது பக்கெட்டுகள், இதில் சேர்க்கப்படும் மலிவான பொருட்களில் தான் இந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, இந்த பாக்கெட்டுகள் வேதி பொருட்களால் கோட்டிங் செய்யப்படுவதால் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. இவற்றில் perfluorooctanoic (PFOA) என்கிற நச்சு தன்மையுள்ள வேதி பொருள் இருப்பதால் தான் இந்த நிலை உருவாகிறது.

ஆண்களே உஷார்..!
இந்த நச்சு பொருள் கொண்ட பாக்கெட்டுகள் அல்லது பக்கெட்டுகளில் பாப்கார்ன் சாப்பிட்டால் ஆண்களுக்கு மிக பெரிய பிரச்சினைகள் உண்டாக கூடும். குறிப்பாக ஆண்களின் அந்தரங்க உறுப்பில் புற்றுநோய் ஏற்படும், அத்துடன் மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு என பலவித நோய்களும் குறைபாடுகளும் வரிசை கட்டி கொண்டு வர தொடங்கும்.

இவ்வளவு பாதிப்புகளா..?
பொதுவாக வெறும் பாப்கார்ன் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் நமக்கு ஏற்படாது. ஆனால், இவற்றை தயாரிக்கும் பாக்கெட்டுகள் அல்லது பக்கெட்டுகளில் இதை வாங்கினால் கட்டாயம் நுரையீரல், கணையம், ஹார்மோன்கள் பாதிப்பு போன்ற கோளாறுகள் வர தொடங்கும். மேலும், இந்த உறுப்புகளில் புற்றுநோயும் உருவாக கூடும்.

இதய பாதிப்பும் வருமா..? பாப்கார்னை தயாரிக்கும் போது விலை மலிவான பொருட்களே சேர்க்கப்படுகின்றன. ஆதலால், கெட்ட கொழுப்புகள், கொலெஸ்ட்ரால்கள் உங்களின் உடலில் சேர ஆரம்பிக்கும். நாளுக்கு நாள் இவற்றின் அளவு அதிகமாகி, உங்களின் இதயத்தை தாக்க செய்யும்.

ஹார்மோன்கள் பிரச்சினை… ஆசைக்காக பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு பிறகு நோயாளியாக மாறி விடாதீர்கள். ஏனெனில், நீங்கள் சாப்பிட கூடிய இந்த பாப்கார்ன்கள் 2,3-butanedione or diacetyl என்கிற செயற்கை மூல பொருட்களோடு சேர்ந்தே தயார் ஆகிறது. இவை மோசமான நச்சு தன்மையை தந்து ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து விடும். எனவே தைராய்டு, டெஸ்டோஸ்டெரோன் சுரத்தல் போன்றவை பாதிக்க கூடும்.

என்ன செய்யலாம்..?
இனியாவது, தியேட்டருக்கு சென்றால் இந்த மைக்ரோவேவ் பாக்கெட் அல்லது பக்கெட்டுகளில் தரும் பாப்கார்னை வாங்கி உண்ணாதீர்கள். வேண்டுமென்றால், வீட்டிலே பாப்கார்ன் செய்து சாப்பிடுங்கள். மேலும், குழந்தைகள் அடம்பிடித்தாலும் அவர்களுக்கு இது போன்ற பாப்கார்னை ஒரு போதும் வாங்கி கொடுக்காதீர்கள். பாப்கார்னை விட நமது உயிரும், நம் குழந்தைகள் உயிரும் விலை மதிப்பற்றது என்பதை மறவாதீர்கள் நண்பர்களே..!