நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்தநாளில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்தநாளான இன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“திராவிட வீரனே விழி, எழு, நட!” எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள்! மாணவர்க்கு மதிய உணவு வழங்கி இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்! அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம்!” என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.