தீவிர புயலாக மாறியது பிபோர்ஜோய் புயல் – கேரளா, மராட்டிய மாநிலங்களில் கன மழை பெய்யும்

அரப்பிக்கடலில் உருவாகியுள்ள பிபோர்ஜோய் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு பிபோர்ஜோய் என பெயரிட்டுள்ளனர். வங்கதேச மொழியில் வைக்கப்பட்டுள்ள இந்த பெயர் ஆபத்தை என்பதை குறிக்கும்.

வடக்கு நோக்கி நகரவுள்ள இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரை நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் வடக்கில் நகர்ந்து மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மிகத் தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய், கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அரபிக்கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுவடைந்ததையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.