தென் இந்தியாவில் வலிமையான பொருளாதாரத்தை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு – ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம்

தென் இந்தியாவின் 5 மாநிலங்களில் எந்த மாநிலம் வலிமையான பொருளாதாரத்தை கொண்டு உள்ளது என புள்ளிவிவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் 2023 ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வுகள் அடிப்படையில் GSDP தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

Gross State Domestic Product என்பது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அல்லது மாநில வருமானம் ஆகும். இது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான மிக முக்கியமான அளவுகோளாக உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் GSDP தரவுகள் அடிப்படையில் 2023 ஆம் நிதியாண்டின் முடிவில் 24.8 லட்சம் கோடி ரூபாய் GSDP உடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகா 22.4 லட்சம் கோடி ரூபாயும், தெலுங்கானா ரூ13.3 லட்சம் கோடி ரூபாயும், ஆந்திரப் பிரதேசம் 13.2 லட்சம் கோடி ரூபாயும், கேரளா 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டிபியுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.